10 இடங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம்!

 
இபிஎப்ஓ

 தமிழகம் முழுவதும் மொத்தமாக 10 இடங்களில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 'நிதி ஆப்கே நிகத்' குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் வைப்பு நிதி உங்கள் அருகாமையில் என்ற தலைப்பில் இன்று ஆகஸ்ட் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீர்க்கும் முகாமினை நடத்த உள்ளது.  

இபிஎப்ஓ

இதுகுறித்து  வருங்கால வைப்புநிதி கமிஷனர் ஜெய் சங்கர் ராய்  "சென்னை வடக்கு மண்டலம் சார்பில் மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையில் உள்ள பொது சுகாதார மையம், அம்பத்தூர் மண்டலம் சார்பில் மாதவரம் மில்க் காலனியில் உள்ள டி.சி.எம்.பி.எப். நிறுவனம் மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வி.ஐ.டி. வளாகம்,

குறை தீர்க்கும் முகாம்

தாம்பரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம் சதானந்தபுரத்தில் உள்ள மாதா இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜியில் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்று வருகின்றன.  இதேபோல வேலூர், புதுச்சேரி மண்டல அலுவலகங்களின் சார்பிலும் என ஒட்டுமொத்தமாக 10 இடங்களில் முகாம் நடைபெற்று வருகின்றன” கலந்து கொண்டு பயனடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web