ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு!! 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி முறை!!

 
தேர்வு

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு 2  முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது. மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் . இந்த இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 2  மொழிப் பாடங்களை படிக்க வேண்டும்   அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்கவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை வரைவு 2017ல்  மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை வரைவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உட்பட   பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.   39 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி அமைக்கப்படும் இந்த கல்விக் கொள்கை, கல்விப் பாதையில் பெரும் புரட்சியை உண்டாக்கும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

ஆனால்  இந்த கல்விக் கொள்கை  மூலம் மும்மொழி கொள்கையை  திணிக்க பார்ப்பதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும்.  இந்த  முடிவு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web