பட்டப்பகலில் பயங்கரம்... அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து.... !

 
ஹுசைன் ஷமீம்

மாலத்தீவு அரசால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீம். இவரை  பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர்.  பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மாலத்தீவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு  வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

கத்திக்குத்து
மாலத்தீவை பொறுத்தவரை தற்போது  முகமது முய்ஸு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது  சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும், கண்டனக்குரல்களும் எழுந்து வருகின்றன.  அதனை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம்  நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹுசைன் ஷமீம்
 அரசு வழக்கறிஞர் ஷமீம் மீதான தாக்குதல், சட்ட மற்றும் அரசாங்கத் துறைகளில் முக்கியப் பிரமுகர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.  இதனால்  மாலத்தீவின்  ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. வழக்கறிஞர் மீதான கத்திக்குத்துச் சம்பவம்  குறித்த  தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை, ஆனால் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் மாலத்தீவு  தீவிரவாதம் மேலோங்கி  சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web