திருவண்ணாமலை தீபத்திருவிழா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு....!!

 
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத்திருவிழா நவம்பர் 26ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான  நவம்பர் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.  மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும்  அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம்  நடைபெறும்.  

திருவண்ணாமலை

இதன் பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.கார்த்திகை தீப தரிசனம் காண நடப்பாண்டில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தரலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி 
கார்த்திகை  தீபத்திருநாளான  நவம்பர் 26ம் தேதி  2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி.  
இதற்காக அன்றைய தினம் காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட உள்ளது. அங்கு  முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கான நிபந்தனைகள் மலை ஏறுபவர்கள்  குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல்  60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி. 
பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களின் நகல் . 


மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.  
இந்த பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதி.  
மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
நவம்பர் 26 ம்தேதி  பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி. 
மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதி 

திருவண்ணாமலை தீபம்


காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திருப்பி எடுத்து செல்ல வேண்டும். அதே போல்  மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும்.
வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ அனுமதி இல்லை. 
பக்தர்கள் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web