நள்ளிரவில் பயங்கரம்.. அடுத்தடுத்து தொடர் கொள்ளை.. முகமூடி திருடனுக்கு வலைவீச்சு..!

 
புதுச்சேரி திருட்டு

புதுச்சேரியில் உள்ள ஸ்டுடியோவில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கேமராக்கள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெனோ. இவர் அதே பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு ஸ்டுடியோவை பூட்டி விட்டு சென்றவர் வியாழக்கிழமை காலை திறக்க வந்தார்.

அப்போது ஸ்டுடியோ கதவின் பூட்டு சேதமடைந்தது. மேலும், அங்கிருந்த 8 கேமராக்களும் திருடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பெனோ அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் புதுச்சேரி அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் கடையின் ஷட்டரை உடைத்து மஞ்சள் பையில் இருந்த கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேக்கரி, மெடிக்கல், ரெஸ்டாரன்ட் கடைகளில் ஒரே நேரத்தில் முகமூடி அணிந்த நபர் புகுந்து திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web