19 வயசு தான் ஆச்சு.... மாரடைப்பால் கனடாவில் பஞ்சாப் மாணவன் பலி!! தொடரும் சோகம்!!

 
மன் ஜோத் சிங்

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில்  ஷம்பு குர்த் பகுதியில் வசித்து வருபவர்   மன்ஜோத் சிங். இவருக்கு வயது 19. இவர் மேற்படிப்பு படிப்பதற்காக ஆகஸ்ட்7 ம் தேதி கனடானவுக்கு சென்று இருந்தார்.   முதல் நாள் வகுப்புக்காக கல்லூரிக்கு வந்த மன்ஜோத்  கல்லூரியில் உள்ள கழிப்பறைக்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டது . இதனால் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

மன் ஜோத்சிங்
இதுகுறித்து அவரது தந்தை கரம்ஜித் சிங்  "கனடாவில் வசிக்கும் எங்கள் மருமகன் அமந்தீப் சிங்கிற்கு மன்ஜோத் மாரடைப்பால் உயிரிழந்ததாக கனடா போலீஸார் கூறியுள்ளனர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர 18 முதல் ரூ20 லட்சம் வரை செலவாகலாம். பல லட்ச ரூபாய் கடன் வாங்கித்தான் என் மகனை மேற்படிப்பு படிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தேன்.  

மாரடைப்பு

அவனது உடலை  கனடாவில் இருந்து பஞ்சாப்பிற்கு எனது மகனின் உடலைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் உதவி செய்ய வேண்டும்" என கண்ணீர் மல்க கூறினார்.பஞ்சாப்பில் வசித்து வரும்   19 வயது மாணவர் மாரடைப்பால் கனடாவில் உயிரிழந்த சம்பவம், அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web