பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி... ஆசிய விளையாட்டு போட்டியில் ஏமாற்றம்... !!

 
பிவி.சிந்து

சீனாவின் ஹாங்சோவ் நகரில்  ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன . இதில் 19 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4 வது இடத்தில் இருந்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  நட்சத்திர வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

பி.வி.சிந்து

பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் பிங்ஜியோவ் ஹே ஆகியோர் காலிறுதி சுற்றில் களம் இறங்கியுள்ளார்.  தொடக்கம்   முதலே  சீன வீராங்கனை பிங்க்ஜியோவ் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் , 47 நிமிடங்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து பிவிசிந்து போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

பி.வி.சிந்து

 இந்திய மகளிர் பேட்மிண்டன் அணியும், காலிறுதிச்சுற்றில் தாய்லாந்து அணியிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.  இதனால் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புகள்  குறைந்துள்ளன. பி.வி.சிந்துவின் தோல்வி ரசிகர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web