பக்தர்கள் லக்கேஜ்களுக்கு கியூஆர் கோடு!! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!!

 
லக்கேஜ்

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஏழுமலையானை தரிசிக்க  வருடம் முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை எனில் அவர்களின் லக்கேஜ்களை  எடுத்து கொண்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதிலும் அடிவாரத்தில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் பாடு லக்கேஜ்களை சுமந்து சென்றால் திண்டாட்டம் தான்.

லக்கேஜ்

அலிபிரி மெட்டு நடைபாதையில் ஏற்கனவே வனவிலங்கு நடமாட்டம் அதிகம். இதில் கைகளில் பைகளை எடுத்துக் கொண்டே செல்வதால் தான் பலர் பின்தங்கி நின்று விடுகின்றனர். இது குறித்து பக்தர்கள் பலமுறை தேவஸ்தான நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில்  பக்தர்கள்  தங்கள் உடைமைகளை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு அடிவாரங்களில் உள்ள தேவஸ்தானத்தில்   ஒப்படைத்தால் அவை திருமலைக்கு வந்து சேர்ந்துவிடும். தற்போது இந்த நடைமுறை நேற்று முதல்  அமல்  படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, உடைமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், மொபைல்  எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. பின்னர், திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம்  பகுதிகளில் பக்தர்கள் தங்கள் உடைமைகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த ஏற்பாடு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லக்கேஜ்

பக்தர்கள் கவுண்டருக்கு வந்ததும், தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு,  தகவல்கள் ஆட்டோமெட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்வர்.  கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்பட்டு விடும். அதேபோல், மொபைல் டெபாசிட் செய்யும் போது, கியூஆர் கோடு குறியீட்டுடன் இணைத்து, ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள்  உடைமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானன் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web