அதிர்ச்சி.... சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு !!

 
ராதா கிருஷ்ணன்

தமிழகத்தின் தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். இவர் கொரோனா காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து பெரும் பணி ஆற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.  சுனாமி பாதிப்பு, கும்பகோனம் தீ விபத்து, கொரோனா என பேரிடர் காலங்களில்  களத்தில் இறங்கி தீவிரமாக பணிபுரிபவர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த தீவிரமாக உழைத்தவர்களில் ராதாகிருஷ்ணன் முக்கியமானவர்.   கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட போது சென்னை மாநாகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தனக்கு வழங்கப்பட்ட சென்னை மாநாகராட்சி ஆணையர் பணியை களத்தில் இறங்கி தீவிரப்படுத்தினார்.  தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில், சென்னையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று டெங்கு கட்டுப்பாடு குறித்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.  

 

டெங்கு
இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக  காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு   டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல்   வீட்டில்  ராதாகிருஷ்ணன் ஓய்வெடுத்து வருகிறார்.  வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் விரைவில் தனது பணிக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web