ரஜினி மகள் இயக்கும் படத்தில் ராகவா லாரன்ஸ்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

 
ராகவா லாரன்ஸ்

பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இளமைக் காலத்தில் பல திரைப்படப் பாடல்களில் குரூப் டான்சராக நடித்த ராகவா லாரன்ஸ், 2002ஆம் ஆண்டு வெளியான "அற்புதம்" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

ருத்ரன்'படப்பிடிப்பு தளத்தில் தன் தம்பிகளை சந்தித்த ராகவா லாரன்ஸ் | Tamil  cinema raghava lawrence post goes viral

காஞ்சனா உட்பட ஒன்பது படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் தற்போது டாப் நடிகராக உள்ளார். இறுதியாக பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், தற்போது  அவரது அடுத்த படத்தின் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Director Soundarya Rajinikanth new direction update viral:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில்  ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சௌந்தர்யா ஏற்கனவே ரஜினியின் கோச்சடையான் மற்றும் விஐபி இரண்டாம் பாகத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அல்லது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 
From around the web