முன்னாள் ஆர்பிஐ தலைவர் தந்தை காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 
கோவிந்தராஜன்


 
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். இவர் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.  ரகுராம் ராஜன் தந்தை ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் - நமது பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தையும், இந்திய உளவுத்துறையில் சிறப்பாகப் பணி ஆற்றிய அதிகாரியுமான ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைந்த செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


தந்தையாரை இழந்து தவிக்கும் ரகுராம் ராஜனை தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்.  இந்தியாவின்  பாதுகாப்புக்காக, குறிப்பாக ரா உளவு அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் பணிபுரிந்த  சிறப்புக்குரிய ராகவாச்சாரி கோவிந்தராஜனின் பணிநன்றியுடன் நினைவுகூரப்படும் எனக் கூறியுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?