ஹரியானா தேர்தலில் வாக்குத் திருட்டு சதி ... ‘H Files’ வெளியிட்ட ராகுல் காந்தி!

 
ராகுல்
 

 

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், பாஜக வெற்றிபெற்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு வைத்துள்ளார். “வாக்குத் திருட்டு சதி நடந்தது; காங்கிரஸ் வெற்றியைத் தடுக்க திட்டமிட்ட சதி நடைபெற்றது” என்று கூறி, ‘The H Files’ என்ற பெயரில் பரபரப்பான ஆதாரங்களை இன்று (நவம்பர் 5, 2025) செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி கூறியதாவது: “ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை. ஒரே பெண்ணின் புகைப்படத்துடன் பல பெயர்களில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தபால் வாக்குகள் மற்றும் EVM வாக்குகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. 22,000 வாக்குகளால் காங்கிரஸ் தோல்வியடைந்தது, ஆனால் இது முறைகேடுகளின் விளைவு. நயாப் சைனி தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் ‘vyavastha’ என்று கூறியதுதான் இதற்கான சதியின் சான்று” என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கார்கே ராகுல்

மேலும், “தபால் வாக்குகளில் 95 சதவீதம் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா தேர்தல்களிலும் இதே போன்று நடந்துள்ளது. இளைஞர்களே, உங்கள் வாக்குரிமை ஆபத்தில் உள்ளது; அதை காக்க நாம் போராட வேண்டும்” என ராகுல் காந்தி எச்சரித்தார். “ஹரியானா தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டை வெளிச்சமிட்டுள்ளோம். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.ராகுல் காந்தியின் ‘H Files’ அம்பலம், ஹரியானா தேர்தல் முடிவுகளைச் சுற்றிய சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் மீது வாக்கு திருட்டு குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!