வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு... ராகுல் காந்தி ஆவேசம்!

 
பீகார்
 

பீகார் சட்டசபைத் தேர்தல் இன்று (நவம்பர் 6) காலை தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

பீகார்

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜகவும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்பதை நாங்கள் உலகிற்கு காட்டியுள்ளோம். இதேபோல பீகாரிலும் வாக்கு திருட முயற்சிப்பார்கள். இதைத் தடுத்து அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீகார் இளைஞர்களின் பொறுப்பு,” என்றார்.

பீகார்

மேலும், “பீகார் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கோடீஸ்வரர்களின் ஆட்சியையே விரும்புகிறார். அதே நேரத்தில், முதல் மந்திரி நிதிஷ் குமார் மாநில இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார்,” என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பீகார் தேர்தலில் புதிய அரசியல் சூட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!