"தேர்தல் கால இந்து".. ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக.. வீடியோ வைரல்..!

 
ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியின் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டப் பயணம் தற்போது நடந்து வருகிறது. மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சுமார் 66 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது. ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரையின் பயணம் தற்போது ஒடிசாவில் நடைபெற்று வருகிறது.


தனது முந்தைய யாத்திரையைப் போலவே, தனது நடைப்பயணத்தின்போதும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆனால், ஆரம்பம் முதலே ராகுல் காந்தியின் 2ம் கட்ட ஒற்றுமைப் பயணம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. யாத்திரை தொடங்குவதற்கு முதலில் மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்தது, பிறகு ராகுல் கார் மீது தாக்குதல், பின்னர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, நாய் பிஸ்கட் சர்ச்சை என பல்வேறு பிரச்சனைகளை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்காரருக்கு ராகுல் காந்தி நாய் பிஸ்கட் கொடுத்து கடுமையாக விமர்சித்த வீடியோவை பாஜக வெளியிட்டது. இதற்கு ராகுல் காந்தியும் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், ஒடிசாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று (பிப்ரவரி 7) ரூர்கேலாவில் உள்ள வேத்வியாஸ் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் அர்ச்சகரிடம் 'என் நெற்றியில் கொஞ்சம் திலகம் போடு' என்று ராகுல் காந்தி கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி

இந்த காணொளியை பகிர்ந்த நிலையில் ராகுலை பாஜக மீண்டும் விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு சென்று தேர்தல் நேரத்தில் மட்டும் திலகம், திருநீறு பூசி வருகிறார். அவர் தேர்தல் கால இந்து என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web