வீடியோ... ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!! 26 பேர் பலி!! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!!

 
ரயில்வே மேம்பாலம்

மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில்  ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில்  26  பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும்  பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என  அஞ்சப்படுகிறது.மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில்  இருந்து  சுமார் 21 கி.மீ., தொலைவில் இருக்கும்  சாய்ரங் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு   இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில்   40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்தனர்.   "இடிபாடுகளில் இருந்து இதுவரை 26 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.    பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  



விபத்து குறித்து வடகிழக்கு ரயில்வே   செய்தித் தொடர்பாளர்   "இடிந்து விழுந்த பாலம் வடகிழக்கு பகுதிகளின் அனைத்து தலைநகரங்களையும் இணைக்கும் இந்திய ரயில்வேயின் திட்டத்தின் ஓர் அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த விபத்து சுமார் 11 மணிக்கு  நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து நடக்கும் போது எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது குறித்தும் இன்னும்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை “ என கூறியுள்ளார்.  



இதனிடையே மிசேராம் முதல்வர் சோரம்தங்கா விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அய்ஸ்வாலுக்கு அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் துயரம் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மீட்புப் பணிகளில் பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.



இந்தப்பாலம், பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு தூணின் உயரம் மட்டும் 104 மீட்டர்கள், மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலை அடைவதற்கு  சாய்ராங் கடைசி நிலையமாக இருக்கும்படி இந்த ரயில்வே   பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் அய்ஸ்வால் தேசிய ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ2 லட்சம் நிவாரண உதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50000 உதவித் தொகையும், உயர் தர சிகிச்சையும் அளிக்கப்படும் எனபிரதமர் மோடி அறிவித்துள்ளார். மம்தா பானர்ஜி  ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web