ஏர் இந்தியா விமானத்திற்குள் கொட்டிய மழை... அதிர்ச்சியில் பயணிகள்!

 
ஏர் இந்தியா விமானம்

எத்தனை மீம்கள் றெக்கைக் கட்டி பறந்தாலும், ஏர் இந்தியா விமானங்கள், தங்களது சேவை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதில் அக்கறைக் காட்டுவதில்லை என்று குரல்கள் சமூக வலைத்தளங்களில் ஒலிக்க துவங்கியுள்ளன.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் மழைத் தண்ணீர் மேற்கூரையில் இருந்து ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 


ஏர் இந்தியா போயிங் பி787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து, பயணிகள் அமர்ந்திருக்கும் கேபினுக்குள் மழைத்தண்ணீர் கசிந்து கொட்டத் துவங்கியது. 

பயணிகள் கலவரத்துடன் பரிதாபமாக அமர்ந்திருக்க, மேற்கூரையிலிருந்து மழை நீர் கொட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில்,  அந்த வீடியோவில் விமான பணிப்பெண்கள் மழைத் தண்ணீர் கசியும் பகுதிகளை, மேலும் மழைநீர் கசியாதவாறு துணியைக் கொண்டு அடைக்கும் காட்சிகளை இன்னும் கலவரப்படுத்துகிறது. 

ஏர் இந்தியா விமானம்

சமீபத்தில், பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது தொடர்பான மீம்கள் மீண்டும் வலம் வரத் துவங்கியுள்ளன.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web