மும்பையில் மழை... உலகக் கோப்பை இறுதி ஆட்டம் பாதிக்கப்படுமா?
இந்தியா–தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு நவி மும்பை டிஓய் பாட்டில் திடலில் நடைபெறவுள்ளது. ஆனால், மும்பையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று நவி மும்பையில் 63 சதவீத மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு கடற்கரைப் பகுதிகளில் ஒன்றான கொன்கன் மற்றும் மும்பை மாவட்டத்தில் நவம்பர் 5 வரை மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

இந்திய மகளிர் அணி இதுவரை ஒருமுறையும் உலகக் கோப்பையை வென்றதில்லை. 2005 மற்றும் 2017-இல் இறுதிக்கு வந்தும் வெற்றியை தவறவிட்டது. இம்முறை மூன்றாவது முறையாக இறுதியில் மோதும் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உற்சாகத்துடன் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணி என்பதால், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வரலாற்றுப் பெருமையை ஏற்படுத்தக்கூடியது. எனினும், மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்பதே வீராங்கனைகள் மற்றும் ரசிகர்களின் ஒரே வேண்டுகோளாக உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
