இன்று இந்த 6 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
மீனவர்கள்
இன்று தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

5 மாவட்டங்களில் கன மழை

அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web