வைரல் வீடியோ... ரூ4000 கோடி செலவழித்தும் ஜி20 மாநாட்டில் தேங்கிய மழை நீர்!!

நேற்று செப்டம்பர் 9ம் தேதி ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாரத மண்டபம் ஒரே இரவில் பெய்த மழையால் பல் இளிக்கின்றது, முறையான வடிகால் அமைப்பு கூட இல்லை.
— 𝗥𝗮𝗺𝗮 𝗦𝘂𝗴𝗮𝗻𝘁𝗵𝗮𝗻 (வாழப்பாடி இராம சுகந்தன்) (@vazhapadi) September 10, 2023
தற்போது இயந்திரங்கள் தண்ணீரை அகற்றும் வேளையில் ஈடுபட்டிருக்கின்றன .
தில்லியில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்ற குடிசைப் பகுதிகளை பச்சை நிற… pic.twitter.com/uLtCp4keXf
உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று இரவு முதல் டெல்லியில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஜி20 மாநாடு நடைபெறும் அரங்கில் மழை நீர் தேங்கத் தொடங்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
இதை ட்விட்டரில் பதிவிட்டு “பத்திரிக்கையாளரின் இந்த காணொளியின்படி, ஜி20 உச்சி மாநாட்டின் இடம் இன்று மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதற்காக ரூ4000 கோடியை கணக்கு காட்டிய பிஜேபியின் உண்மை நிலை இது தான் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் “2,700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாரத் மண்டபம் ஒரே இரவில் பெய்த மழையால் பல் இளிக்கின்றது, முறையான வடிகால் அமைப்பு கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. இயந்திரங்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் எளிய மக்கள் வாழ்ந்து வருகின்ற குடிசைப் பகுதிகளை பச்சை நிற பதாகைகள் மூலம் மறைத்த மோடி அரசு இதனை சரியாக வடிவமைக்க தவறிவிட்டது. இச்செயல் தேச அவமானம். மழை ஒரு தேசவிரோதி என தான் மோடி அரசு கூறும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!