நவம்பர் மாத இறுதியில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு ... !

 
புயல்
 

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இதுவரை இரண்டு சுற்று மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் உருவான “மோந்தா” புயல் ஆந்திராவில் கரையைக் கடந்ததையடுத்து சிறிய இடைவெளி ஏற்பட்டது. இருப்பினும் வெப்பச்சலனத்தால் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மழை

நவம்பர் 7ம் தேதி வரை வட மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் அதனையொட்டிய இடங்களில் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் இயல்பைவிட குறைவான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், சில தனியார் வானிலை நிபுணர்கள் அதே கருத்தை பகிர்ந்துள்ளனர்.

பனி, மழை

ஆனால் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், நவம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என கூறியுள்ளார். முதல் பாதியில் வெயில் சுட்டெரித்தாலும், இரண்டாம் பாதியில் மழை தீவிரமாகும் என்றும் அவர் தெரிவித்தார். நவம்பர் 12ம் தேதிக்கு பிறகு கிழக்குக் காற்று தமிழகத்துக்குள் நுழையத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து 15ம் தேதியிலிருந்து பருவமழை மீண்டும் வலுப்பெற்று, நவம்பர் 23ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வட மாவட்டங்களில் அதிக கனமழை ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!