ரஜினி ஓபிஎஸ் திடீர் சந்திப்பு... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
ரஜினி ஓபிஎஸ்

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்துள்ளது. ஜெயிலர் பட வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இமயமலை சென்ற ரஜினி அதன் பிறகு கர்நாடகாவில் சொந்த ஊர் சென்று திரும்பியுள்ளார்.

ரஜினி ஓபிஎஸ்

இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படுகிறது. ஆனால்  தற்போதைய அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர்


'ஜெயிலர்’ பட வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூருவில் தான் பணி செய்த இடத்துக்கு விசிட், சொந்த கிராமத்திற்கு சென்று திரும்பியது என  ரிலாக்சாக இருந்து வரும் நிலையில்  ’தலைவர் 170’ படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.   இந்நிலையில் ரஜினி, ஓபிஎஸ் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பெரும் பேசுபொருளாகவும் ஆகியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web