ரஜினி படத் தயாரிப்பாளர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!!

 
வி.ஏ.துரை


பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.  இவர் பிதாமகன், லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உட்பட முண்ணனி கதாநாயகன்களின்  படங்களை தயாரித்தவர். ரஜினிகாந்த்தின் பாபா திரைப்பட தயாரிப்பு மேற்பார்வையாளராகவும் இருந்தவர்.    கடந்த சில மாதங்களாக திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார்.

வி.ஏ.துரை

 நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு உதவ வேண்டும் என மார்ச் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியான தமிழ் திரையுலகின் முண்ணனி பிரபலங்கள் பலர் உதவி செய்தனர்.  முன்னதாக மருத்துவமனையிலும் அதனைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலும் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு  அவரது உயிர் பிரிந்தது.

rip


இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என 2 மகள்கள். அவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 2வது மனைவியின் மகள் கீர்த்தனா.  வி.ஏ.துரைக்கு சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது. அதன்பிறகு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web