மாஸ் வீடியோ.... ரஜினி காந்த் ரசிகர்களுடன் ஷெல்பி!

 
rajini selfie

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் லால் சலாம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனத் தயாரிப்பில்  ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில்  நடிகர்  ரஜினிகாந்த் உடன் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  அனிருத் இசையமைப்பில்  வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக  நடிகர் ரஜினிகாந்த்  இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து  புறப்பட்டு சென்றார்.  

ரஜினி

விமானத்திற்கு லேட் ஆகிவிடும் என்பதனால் பேட்டி கொடுக்காமல் விறுவிறுவென சென்று கொண்டிருந்தார். ஆனால் ஷெல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.   ரசிகர்கள் காத்திருந்ததை அறிந்ததும், அவர்களுடன்  சிறிது நேரம் செலவிட்டு  போட்டோ எடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார். அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!