அட்ராசிட்டி... முரண்டு புடித்த பேரன் வேத் கிருஷ்ணாவை ஸ்கூலில் டிராப் பண்ணிய ரஜினிகாந்த்!

 
ரஜினி

 
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு  தற்போது 72 வயது. அவர் இப்போது சுறுசுறுப்பாக பிசியாக நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கான இசை அனிருத்.  இப்படம்  அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இத்துடன்  ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
ரஜினி

அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.  கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவின் மூத்த மகன் வேத் கிருஷ்ணா, ஸ்கூலுக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறார்.  இந்த விஷயத்தை செளந்தர்யா தன் தந்தையிடம் சொன்னதும், மகள் வீட்டுக்கு தன்னுடைய் பிஎம்டபிள்யூ காரில் மகள் வீட்டுக்கு  சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது பேரனை சமாதானப்படுத்தி தன்னுடைய காரிலேயே அவரை ஸ்கூலுக்கு அழைத்து சென்றுள்ளார்.  
ரஜினிபேரனை காரில் அழைத்து சென்று வேத் கிருஷ்ணாவின் வகுப்பறைக்கும் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அங்கு ரஜினியை பார்த்ததும் அனைவரும் உற்சாக கூச்சலிட்டனர்.  இந்த அழகிய தருணத்தை  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு  செளந்தர்யா, ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி எந்த ரோல் கொடுத்தாலும் அதை சரியாக செய்வதில் நீங்கள் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  சிறந்த தாத்தா, சிறந்த அப்பா என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்  செளந்தர்யா. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!