ரஜினிகாந்த் சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க மனு?!

 
ரஜினி சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்முடைய ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்ததாக செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இதன்படி சந்திரபாபு நாயுடு   ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ரஜினி சந்திரபாபு நாயுடு

அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைது குறித்து அவருடைய மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  ரஜினிகாந்த்  பேசியதாக தகவல்கள் வெளியானது.  அந்த உரையாடலில்  "நீங்கள் தைரியமாக இருங்கள், என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு எந்த தவறையும் செய்திருக்க மாட்டார்,

சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டேன்!! கதறும் சந்திரபாபு நாயுடு!!

அவர் செய்த பல நலத்திட்ட உதவிகளும், மக்களுக்கு செய்த தொண்டும் அவரை காப்பாற்றும்" எனக் கூறியிருப்பதாக  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை  சிறைக்கு சென்று நேரில் சந்திக்க அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம்  நடிகர் ரஜினிகாந்த் சார்பில் மனு  அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web