ரஜினி காந்த் கர்நாடகாவில் கால் வைக்கக் கூடாது.. வாட்டாள் நாகராஜ் மிரட்டல்!!

 
வாட்டாள் நாகராஜ்


 
உச்சநீதிமன்றம் விநாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கர்நாடகாவில் பெரும் கண்டனங்களும், எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன. இந்த தீர்ப்பு கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரு, பெங்களூரு  உட்பட பல  இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மைசூருவில்  பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடகா ராஜ்ய ரைத்தா சங்கம் மற்றும் ஹசிரு சேனா இயக்கத்தினர்  நடத்திய போராட்டத்தில்  ஸ்டாலினின் உருவப் படம்  கிழித்தெறியப்பட்டது.

ஸ்டாலின்

 நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ‘’ கர்நாடகாவில்   எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை நான் தமிழக முதல்வரிடம்  தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எந்த தண்ணீரை குடிக்கிறார்கள்? அவர்கள் அதைக் குடிக்க வேண்டுமா, வேண்டாமா?
அவர்கள் தண்ணீரைக் குடிக்க வேண்டுமெனில் தமிழகம் தன் நிலைப்பாட்டை மாற்றவேண்டும். இல்லையெனில், ரயில்கள், பேருந்துகள்,   லாரிகள் மூலமாக அவர்களைத் திரும்ப  அழைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக காவிரி நீரை குடிக்காமல் தமிழகம் திரும்பும்படி கூறுங்கள் .

வாட்டாள் நாகராஜ்

தமிழகத்திற்கு இனிவரும் நாட்கள் எளிதாக இருக்க வாய்ப்பில்லை.  தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே போர் மூளும் சூழல்  அதிகரித்து வருகிறது . தமிழ் படங்களுக்கு தடை விதிப்போம். ரஜினிகாந்த் கர்நாடகாவிற்குள் நுழையக்கூடாது. காவிரி குறித்த அவரது நிலைப்பாடு குறித்து அறிவிக்க வேண்டும்.   ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் கர்நாடகாவுக்காக நிற்பீர்களா அல்லது தமிழகத்திற்கு  ஆதரவாக இருப்பீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web