அயோத்தியில் கண் திறந்தார் ராமர்... சிலைக்கு உயிரூட்டம்... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

 
அயோத்தி ராமர் மோடி

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகளை செய்து முடித்தார்.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.  இதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார்.  அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். 

 


கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர். 

ராமர்

அபிஜித் முஹூர்த்தத்தின் போது மதியம் 12:29:03 முதல் 12:30:35 மணி வரை இருக்கும் மங்களகரமான 84 வினாடிகளில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web