ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்... எம்எல்ஏ காருக்கு தாக்குதல்... சேலத்தில் பதற்றம்!
பாமக அமைப்பில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையிலான உள்கட்சி மோதல் சேலம் அருகே வாழப்பாடி பகுதியில் நேற்று வெடித்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் மீது கல் வீச்சு நடந்து சேதம் அடைந்தது.
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், பாமக தலைவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். கடந்த சில வாரங்களாக அவருக்கும் அன்புமணி ஆதரவாளர்களுக்குமிடையே பதட்டம் நிலவி வருகிறது. அருளுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று மதியம் வாழப்பாடியில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்ற அருள், பின்னர் கார் மூலம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் குழுவினர் அவரது வாகனத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்.
இதனால் அப்பகுதியில் குழப்பம் ஏற்பட்டது. உடனே ராமதாஸ் ஆதரவாளர்களும் எதிர்வினையாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரும் உருட்டுக்கட்டைகள் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் சூழ்நிலை பதற்றமானது.

இந்த மோதலில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள் இருந்த அருளை அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றி சென்றனர். தற்போது அவர் சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் முறையிட்டு வருகிறார்.
இருதரப்பினரும் தாக்குதல் நடத்திய சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் கண்காணிப்பு வலுப்படுத்தி, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
