ராமாயி செய்த கொடூரம்... நடுரோட்டில் கணவனின் மூளை தெறித்து சிதறியது.. கள்ளக்காதலன் கைது!

 
ராமாயி

இரும்பு ராடால் வெறித்தனமாய் தாக்கியதில் மூளை சிதறி கணவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தை அதிர வைத்திருக்கிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து ராமாயி போட்ட ஆட்டத்தைப் பற்றி தான் அதிர்ச்சியுடன் சேலம் மாவட்டத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மோட்டுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(36). இவரது மனைவி ராமாயி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் வார விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமையில் வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை சேலத்திற்கு சென்று வாங்கிக் கொண்டு தனது பைக்கில் மளிகை பொருட்களுடன் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார்.  

ஆம்புலன்ஸ்
இரவு 10 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியான, வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் பகுதியில் இவர், பைக்குடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அந்த வழியாக வந்த பொதுமக்கள், சிவக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த  போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர்.  

சிவகுமாரின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறினார். அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் தரப்பில், சிவக்குமாரின் மனைவி ராமாயி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.  

போலீசாரிடம், ‘இனி அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்’ என ராமாயி உறுதியளித்ததை தொடர்ந்து தம்பதியினரை சமாதானம் செய்து, குடும்பம் நடத்தும்படி  அனுப்பி வைத்தனர்.   ராமாயிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அவர் கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய எண்ணை வைத்து விசாரணை தொடங்கினர். அதில் ராமாயி ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போனில் பேசியதை உறுதி செய்தனர். அவரிடம் அடிக்கடி பேசியதும் பதிவாகியிருந்தது. கடைசியாக அந்த இளைஞரின்  செல்போன் எண்ணுக்கு தான் அவர் பேசியுள்ளார். அதனால், போலீஸ் பிடி அவரது மனைவி மீது இறுகியது.

போலீஸ்

சிவக்குமார் விபத்தில் சிக்கியிருந்தால், பைக் சேதமாகி இருக்கும். ஆனால், பைக்கில் ஒரு கீறல் கூட இல்லை. இதனால் திட்டுமிட்டு சிவக்குமாரை தலையில் இரும்பு ராடால் தாக்கியது தெரிய வந்தது. கொலையான இடத்தில் அவரது மூளை சிதறி வெளியே கிடந்தது. இரும்பு ராடால் தலையில் மட்டும் தாக்கி சிதைத்துள்ளனர். மற்ற இடங்களில் எந்த காயமும் இல்லை. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சிவக்குமாரை கொலை செய்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து ராமாயிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் ஏற்காடு மதுராயன்காடு பகுதியை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் சந்தோஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராமாயி கொடுத்த தகவலின் பேரில் சந்தோஷ் தனது நண்பருடன் சேர்ந்து சிவக்குமாரை இரும்பு ராடால் தாக்கி கொன்றிருப்பது தெரிய வந்து, போலீசார் சந்தோஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?