அக்னி தீர்த்த கடலில் கலக்கும் கழிவுநீர்.. அட்டூழியம் செய்யும் விடுதிகள்.. பக்தர்கள் வேதனை..!

 
ராமேஸ்வரம் கடல்நீர்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவார்கள். சமீபத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, முதலில் இந்த புனித அக்னி தீர்த்தத்தில் நீராடினார். அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் புனித அக்னி தீர்த்தம் மாசு அடைந்துள்ளது.

ராமேஸ்வரத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி .. போட்டோ ஆல்பம்... | Etamilnews

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை  கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரித்தது. ஆனால் நேற்று நகராட்சி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் அக்னி தீர்த்த சாலையில் பெருக்கெடுத்து ஓடி தீர்த்த கடலில் கலந்தது.

தோஷம் போக்கும் அக்னி தீர்த்தம் | agnitheertham rameswaram

இதனால் கடற்கரை முழுவதும் அக்னி தீர்த்த வாசனை வீசியதால் பக்தர்கள் வெறுப்படைந்தனர். எனவே, கழிவு நீரை திறக்கும் லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அக்னி தீர்த்தத்தில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web