சாகும் வரை உண்ணாவிரதம்... போராட்டத்தை கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

 
போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று முன் தினம் துவங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை  கைவிட்டு, வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்குச் மீன் பிடிக்கக் கிளம்பி சென்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறித்து செல்வதும், துப்பாக்கி முனையில் மிரட்டி, மீனவர்கள் வைத்திருக்கும் மீன்களைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறினாலும், தமிழக  மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

போராட்டம்

இந்நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பலரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுவித்தாலும், 5 மீனவர்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் எதிரே நேற்று  முன் தினம் முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர். ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் என ஏராளமானோர் திரண்டு  உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் ராமேஸ்வரம் போராட்டம்
இரண்டாவது நாளாகவும்  நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நீடித்த நிலையில், திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எம்எல்ஏ உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்று மீனவர்கள் தங்கள் போராட்டத்தை நேற்று மாலை வாபஸ் பெற்றனர்.இன்று காலை ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர். மீண்டும் இந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், கைது செய்து செல்லாமல் இருக்கவும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web