கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

 
ரங்கநாயகி

 
கோவை மாநகராட்சி மேயராக 29 வது வார்டு் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக சான்றிதழை மாநகராட்சி ஆணையர் சிவகுருபாகரன் வழங்கினார்.கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து  மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கோவை மேயர் பொறுப்புக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் ரங்கநாயகி போட்டியிடுவார் என திமுக  அறிவித்திருந்தது.

ரங்கநாயகி

திமுக அமைச்சர்கள் நேரு, முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு 29-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. 2022ல்  நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. 
கோவை மேயர் கல்பனா

இதையடுத்து, 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். கோவை மாநகராட்சியின் 6வது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார்.  கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும்  மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாகத் தெரிகிறது.  இதனையடுத்து கோவை மேயர் கல்பனா கடந்த 3ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!