முன்னாள் முதல்வர் மனைவி ராசாத்தி அம்மாள் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

 
கனிமொழி
 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி உடன் சென்னை சி.ஐ.டி. காலனியில் வசித்து வருகிறார். அண்மை காலமாக அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுவலி பிரச்சினைகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையடுத்து, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். மருத்துவர்கள், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவை கவனத்தில் கொண்டு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் தகவலின் படி, சிகிச்சை பிறகு ராசாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?