நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு.... வைரலாகும் இன்ஸ்டா!

 
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தானா நடிகை ஷ்ரத்தா தாஸுடன் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் சனிக்கிழமையன்று பதிவு செய்திருந்தார். அதில் "இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று எழுதினார்.  ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா மற்றும் பிற பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் விஸ்தாரா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, பயணிகள் பதற்றத்தில் நடுங்கினர்.

இந்த பயணத்தின் போது மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்களுக்கு பிறகு மும்பை திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா (PTI Photo)

சமீபத்தில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிகர் ரன்பீர் கபுரூடன் ஜோடியாக நடித்திருந்தார். இவர் விரைவில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15 வெளியிடப்பட உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web