கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எலி காய்ச்சல்... பெரும் பரபரப்பு!

 
எலி காய்ச்சல்
 

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டதற்காக 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலி காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோதனையில் அவர்களில் ஒருவருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்லூரி நிர்வாகம் கேன்டீன் உரிமத்தை ரத்து செய்து, மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

எலி காய்ச்சல்

அதே நேரத்தில் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள்  தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு குடிநீர் மற்றும் உணவு தயாரிப்பில்  சுகாதாரப் பிழைகளை கண்டறிந்து, உடனடியாக கல்லூரியை மூட உத்தரவிட்டனர். மேலும், 15 மாணவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அவர்களுக்கும் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலி காய்ச்சல்

இதன் காரணமாக   உடல் நலக் குறைபாடுகள், தலைவலி, காய்ச்சல், உள்ள மாணவர்கள்  சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கல்லூரி நிர்வாகத்துக்கு விரைவில் வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 2 உணவகங்களின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?