தீபாவளி ஸ்பெஷல்... அக்டோபர் 5 , 6 தேதிகளில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.... !

 
தாயுமானவர்
 

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது வினியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

வீடு தேடி ரேஷன் பொருட்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6ம் தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை அனைத்து ரேஷன்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின்  தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?