அடி தூள்... மைக்ரோ ஏடிஎம்களாக மாற்றப்படும் ரேஷன் கடைகள்!
தமிழகம் முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மானிய விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் இதனை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் வழங்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி அரசின் ஓய்வூதியங்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை போன்றவைகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை டெபிட் கார்டு பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பயனாளர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மலை கிராமங்களில் ஏடிஎம் கிடையாது.
இதன் காரணமாக ஓய்வூதியங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசு தொகை இவைகளை எடுத்துக்கொள்ள அவர்கள் ஒவ்வொரு முறையும் வங்கியையே நாட வேண்டியுள்ளது. 2014 முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகை நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் சென்டர்களை எளிதில் அணுக முடியாத மக்களுக்காக தற்போது ரேஷன் கடைகளை மைக்ரோ ஏடிஎம்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 4500 மையங்களில் 3500 மையங்கள் மைக்ரோ ஏடிஎம் களாக மாற்றப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது ரேஷன் கடைகள் மைக்ரோ ஏடிஎம்களாக மாற்றப்படும்போது ரூ1000 முதல் ரூ2000 வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.தமிழகத்தில் சுமார் 34 லட்சம் பேர் முதியோர் ஓய்வுத் தொகையை பெற்று வருகின்றனர். அவர்களில் 2.7 லட்சம் பேர் நேரடியாக வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் செல்கிறார்கள். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏடிஎம் வந்தால் அவர்கள் எளிதாக உதவி தொகையை அங்கேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது கிராமப்புற மக்களுக்கு பெரிதாக உதவும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!