செப்டம்பர் 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!!

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் விடுமுறை பட்டியலில் செப்டம்பர் 17ம் தேதி தான் முதலில் விநாயகர் சதுர்த்தி தினமாக அறிவிக்கப் பட்டு இருந்தது. செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 18ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது .
தற்போது விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படும் செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை ரேஷன் கடைகள் செயல்படாது அன்றைய தினம் முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ம் தேதி விடுமுறை, அடுத்த நாள் செப்டம்பர் 18ம் தேதி விடுமுறை இருநாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!