’ஒழுங்கா படி’.. கண்டித்த தாய்.. விரக்தியில் மகள் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, புனையில் உள்ள ஹடப்சரில் அமனோராவின் நவநாகரீக டவர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு, 14 வயது சிறுமி, ஜூலை, 17ல், 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் காட்டத்தால், தாய் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த சிறுமி இந்த துயர முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா