திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் ஏடு படிக்கும் நிகழ்வு.. ‘அ’ எழுதி கற்றலை தொடங்கிய குழந்தைகள்!

 
திருவந்திபுரம் ஹயகிரீவர் வித்யாரம்பம்

இன்று விஜயதசமி வித்யாரம்ப நிகழ்வையொட்டி கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலின் மலைப்பகுதியில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நடைபெற்ற ஏடு படிக்கும் நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு ‘அ,ஆ’ என பரப்பப்பட்டிருந்த நெல் மணிகளில் எழுதி கல்வியை தொடங்கினர்.

விஜயதசமி வித்யாரம்பம்

108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர்.

வித்யாரம்பம்

முன்னதாக லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி, நெல்லை பரப்பி, நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ, ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?