பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிங்க... இத்தாலியில் வெடித்த போராட்டம்!
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக தலைநகர் ரோம் உட்பட பல முக்கிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.
Italy's Streets Ablaze: Pro-Palestine Fury Turns Violent Over Meloni's Palestine Snub! 🇮🇹🔥.
— Trending Eyes (@thetrendingeyes) September 23, 2025
Italy erupted in chaos on September 22, 2025, as massive pro-Palestine protests—sparked by Prime Minister Giorgia Meloni's refusal to recognize Palestinian statehood like recent moves… pic.twitter.com/tbQShVYTmD
மிலன், ரோம் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் பேரணிகளையும், வேலை நிறுத்தங்களையும் நடத்தினர். ‘எல்லாவற்றையும் தடுப்போம்' என்ற பெயரில் நடந்த இந்த போராட்டங்களில், போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களை மறித்தனர்.மிலனில், மத்திய ரயில் நிலையத்தில் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காசாவில் நடந்த வன்முறையை இனப்படுகொலை என போராட்டக்காரர்கள் கூறினர்
மிலன், நேபிள்ஸ் மற்றும் ரோம் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி, பல இடங்களில் போலீசாருடன் மோதினர். சில போராட்டக்காரர்கள் கண்ணாடிகளை தடிகளால் உடைத்து, போலீசார் மீது நாற்காலிகளை வீசினர். இது குறித்து வெளியான அறிக்கைகளின்படி வன்முறையில் சுமார் 60 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் 12 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த போராட்டங்கள் பள்ளிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளையும் பாதித்தன. இதனால் இத்தாலியின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
