சீமான் சம்மனை வாங்க மறுப்பு... நடிகை விஜயலட்சுமி வழக்கில் கறார்....

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் செய்திருந்தார். இது குறித்து நடிகை விஜயலட்சுமியிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதுவரை இந்த விசாரணக்கு ஆஜராகாத சீமான், தனக்கு வேறு ஒரு வழக்கின் பணிகள் நிலுவையில் இருப்பதால் நேரில் ஆஜராக முடியவில்லை. வழக்கு குறித்த ஆவணங்களை வழங்குமாறு வழக்கறிஞர் மூலம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.ஆனால் சீமான் இதனை வாங்க மறுத்துவிட்டார். போலீசார் சம்மனை வழங்குவதற்காக சீமானின் வீட்டிற்கு நேரில் சென்றனர். ஆனால் அங்கு சம்மனை வாங்க மறுத்ததால் சம்மனை வழங்காமல் காவல்துறையினர் திரும்பி சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!