10கிமீ உயிரிழந்தவரின் உடலை பைக்கில் ஏற்றிச் சென்ற அவலம்!!

 
பைக்கில் சடலம்

சந்திரனுக்கு சந்திராயனும், சூரியனுக்கு ஆதித்யாவும் ஒரு புறம் விட்டுக்கொண்டு இருக்க மறுபுறம் மனிதநேயம் தேய்ந்து வருகிறது. அவரவர்களின் அவசர வாழ்க்கையில் யாரையும் திரும்பிப்பார்க்க யாருக்கும் நேரம் இல்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல கூட வாகன வசதி தருவதில்லை. ஆம்புலன்ஸ்களும்கிடைப்பதில்லை. பேரம் பேசும் கலாச்சாரம் இதனால் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்லல் , பைக்கில் கொண்டு செல்லுதல் என அவலங்கள் தொடர்ந்து வருகின்றன. 

மின்னல் பலி


ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் 108க்கு அழைத்தனர். 3 மணி நேர காத்திருப்புக்கு பிறகும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் 10கிலோமீட்டர் அவரை கொண்டு சென்றனர். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

ஆம்புலன்ஸ்


அங்குல் மாவட்டத்தில்  பாலசிங்க கிராமத்தில்  விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் வாழும் பகுதி. இங்கு 60 வயது துவாரி குரு  கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென தாக்கிய மின்னலில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web