முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.. அக்.12ல் தேர்வு.. டவுன்லோடு செய்வது எப்படி?!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்

அக்டோபர் 12ம் தேதி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு-1 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ள நிலையில், நேற்று தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை எப்படி டவுன்லோடு செய்வது என தெரிஞ்சுக்கோங்க. ஒருமுறைக்கு இருமுறையாக முழுவதும் செக் பண்ணிக்கோங்க. 

தமிழகத்​தில் உள்ள அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் 1,996 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறிவிக்​கையை ஆசிரியர் வாரி​யம் ஜூலை 10ம் தேதி வெளி​யிட்டு அதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​களை ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை பெற்​றுக் ​கொண்​டது. எழுத்துத்தேர்வு அக்டோபர் 12ம் தேதி நடை​பெறும் என அறி​வித்​திருந்த நிலையில், நேற்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 

டெட் தேர்வு ஆசிரியர்

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025 நாள் 10.07.2025 ன் படி 2025-ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்லி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு வரும் 12-102025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள், அவர்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் ஆசிரியை பேராசிரியர்

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்குட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டனை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?