அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு!!

 
தேர்வு

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம்’ புயல்  காரணமாக  சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. இதனையடுத்து  பள்ளிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை தொடர்விடுமுறை அளிக்கப்பட்டது.நாளை டிசம்பர் 11ம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும்  அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரையாண்டு தேர்வு அட்டவணை

இந்நிலையில்  தொடர்கனமழை காரணமாக புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை  நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுகளை புதன்கிழமை டிசம்பர் 13ம் தேதி  தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில்  தற்போது அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு அட்டவணை

அரையாண்டு தேர்வு அட்டவணை


இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகங்களை  இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இவைகளை நாளை மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web