ரேஷன் கார்டு இல்லாதவங்களுக்கும் ரூ6000/- நிவாரணத் தொகை.. தமிழக அரசு அதிரடி !

 
மிக்ஜாம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட  4மாவட்டங்களில்  வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால்  சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் நாட்கணக்காக மழை நீர் வெள்ளம் வடியாமல் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சாரம், குடிநீர் உணவு இன்றி   வயிற்றுப்பசியோடு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக காத்து கிடந்தனர்.

மிக்ஜாம்

இவர்களின் துயர் தீர்க்கும் வகையில் தமிழக அரசு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சென்னையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்  ரூ6000 நிவாரணத் தொகை அறிவித்திருந்தது. பலரிடம் ரேஷன் கார்டுகளே இல்லாத நிலையில் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மிக்ஜாம்

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நிவாரணத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில்  தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web