புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ6000 நிவாரண நிதி... முதல்வர் அதிரடி...!!

 
ஸ்டாலின்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில்    வரலாறு காணாத  பெருமழை பெய்தது. இதனால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன  . நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன.  பெரும்  உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

பணம்

மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும்  தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. 
இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக  ரூ6000 வழங்கப்படும் என தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல்

இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் ரொக்கத்தொகை வழங்கப்படும்.   மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 17000  நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!