மதப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 36 மாணவர்கள் பலி... பெரும் சோகம்!

 
இந்தோனேஷியா


ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மதப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த மதப்பள்ளியில்  நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மத வழிபாடு செய்து கொண்டிருந்த மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். 


இச்சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 5 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இடிபாடுகளில் சிக்கிய 104 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?