குட் நியூஸ்! தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!! இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!
 
employment office

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014 – 2016 ஆகிய 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017 – 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையங்களில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு!!…

இந்தச் சலுகையை பெற விரும்பும் வேலை நாடுநர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (2-ந் தேதியில் இருந்து) 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையங்களில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு!!…

இந்த அரசாணை, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளது.அதன்படி மார்ச் 1ஆம் தேதி வரை பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது அருகில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை கொடுத்து புதுப்பித்து கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க... 

சனிக்கிழமைகளில் இதை தானம் செய்து பாருங்க! அதுக்கப்புறமா வாழ்க்கையில் எப்பவுமே வெற்றி தான்!

வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க இதனை மட்டும் செய்து பாருங்க!!