நாகர்கோவிலில் நெகிழ்ச்சி... பெண் ஓவியர் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்து!
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நடைபெற்ற வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சந்தியாதேவி என்ற பெண் ஓவியர், தான் கைப்பட வரைந்த பிரதமரின் உருவப்படத்தை அவரிடம் வழங்க முயன்றார். பாதுகாப்புக் காரணங்களால் அந்த ஓவியத்தைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதனைப் பிரதமரிடம் ஒப்படைத்தனர்.

தன்னுடைய உருவப்படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக அந்த ஓவியத்தின் பின்புறம் தனது கையெழுத்தைப் போட்டுத் தந்தார். பின்னர் அதனை மீண்டும் அந்தப் பெண்ணிடமே ஒப்படைக்குமாறு அதிகாரிகளிடம் வழங்கினார். தன் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்து பிரதமர் கையெழுத்திட்ட அந்த ஓவியத்தைப் பெற்றுக்கொண்ட சந்தியாதேவி, அதனைத் தனது வாழ்நாளின் பெரும் பொக்கிஷமாகக் கருதி வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது மற்றுமொருவர் வழங்கிய மோடி தனது தாயாரிடம் ஆசி பெறும் புகைப்படத்தையும் பிரதமர் பெற்றுக்கொண்டார். பேரணியின் இறுதியில் அங்குத் திரண்டிருந்த முதியவர்களிடம் அவர் தலை குனிந்து ஆசி பெற்றதோடு, மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நலம் விசாரித்தது அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
